சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஓய்வுபெற்ற உய்குர் தபால் ஊழியர், உடல்நலப் பிரச்சினைகளால் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பின்னர் அவர் 2020 இல் மீண்டும் கைது செய்யப்பட்டு சட்டவிரோத மத நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக 10ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் பைம்ஹானின் மகள் நூர்பியாவை மேற்கோள் காட்டி ரேடியோ ஃப்ரீ ஏசியா இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் முதன்முதலில் தடுத்து வைக்கப்பட்ட, ஹோட்டன் மாகாணத்தினைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தபால் ஊழியரான பைம்ஹான் மாமுத், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மோசமான உடல்நிலை காரணமாக விடுவிக்கப்பட்டார்.
பைம்ஹான் தடுப்பு முகாமில் உள்ள மற்ற கைதிகள் குளிர் அறைகளில் வைக்கப்பட்டிருந்த போது அவர்களின் காலணிகள், காலுறைகள் ஆகியவற்றைக் களற்றியமையால், தனது தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என நூர்பியா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
‘எனது தயார், நிற்கவோ நடக்கவோ முடியாத காரணத்தால் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டார். முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்குக் காலணி கூட வழங்கப்படவில்லை என்பதை நான் அறிந்தேன்’ என்று அவர் கூறியுள்ளார்.
2019இல் விடுவிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பெற்ற பைம்ஹான், 2020இல் மீண்டும் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நூர்பியாவின் கூற்றுப்படி, அவர் தற்போது காஷ்கர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
‘மத தீவிரவாதம்’ என்ற குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட பைம்ஹானுக்கு 60வயதுக்கு மேல் ஆகிறது என்று ஹோட்டன் தபால் அலுவலகத்திற்கு அருகிலுள்ள காவல் நிலைய அதிகாரியை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
உய்குர் முஸ்லிம்களை வெகுஜன தடுப்பு முகாம்களுக்கு அனுப்புவதன் மூலமும், அவர்களின் மத நடவடிக்கைகளில் தலையிடுவதன் மூலமும், சமூகத்தின் உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக மறு கல்வி அல்லது போதனைக்கு அனுப்புவதன் மூலமும் சீனா உலகளவில் எதிர்மறையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
உய்குர்களுக்கு எதிரான தனது அடக்குமுறையை முடுக்கிவிட்ட சீன அரசாங்கம், 2017முதல் ஷின்ஜியாங்கில் உள்ள தடுப்பு முகாம்களின் வலையமைப்பில் 1.8 மில்லியன் உய்குர்களையும் பிற துருக்கிய சிறுபான்மையினரையும் தடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.