சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் வட சீனாவின் சில பகுதிகளில் இயற்கை எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வடமேற்கு ஷனெக் மாகாணத்திலுள்ள வினினன் நகரில் வசிப்பவர்களுக்கு இம்மாதத்தின் தொடக்கத்தில் கடுமையான பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால் அவர்களின் தேவை அதிகரித்துள்ளது.
எனினும் இயற்கை வாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இயற்கை எரிவாயு நிறுவனத்தால் மன்னிப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் வாடிக்கையாளர்கள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதேநேரம், ஹெபெய் மாகாணத்தில் உள்ள இடங்களில் கடந்த மாத தொடக்கத்திலும் நடுப்பகுதியிலும் இயற்கை எரிவாயு விநியோகத்தை தடை செய்ததாக சீன அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
திரவ இயற்கை எரிவாயுவின் விலை கடந்த வாரத்தில் 25 சதவீதமும், கடந்த மாதத்தில் 75 சதவீதமும் உயர்ந்துள்ளது.
ஷங்காய் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு பரிமாற்றத்தின் கூற்றுப்படி ஒரு தொன் 1,328 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதால், எரிவாயு நிறுவனங்களும் பெரும் அழுத்தத்தில் உள்ளன.
பெரும்பாலான எரிவாயு நிறுவனங்கள் நிலையான கொள்முதல் விலைகள் மற்றும் விநியோகத் தொகைகளுடன் நீண்ட கால விநியோக ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றன என்று முதலீட்டாளர் ஒருவர் கூறியுள்ளார்.
எரிவாயு நிறுவனங்கள் சில சமயங்களில் சந்தை விலையில் எரிவாயுவை வாங்க வேண்டும் என்றாலும், உண்மையான தேவை ஒப்பந்த விநியோகத்தை விட அதிகமாக இருக்கும் போது, விலையில் உள்ள பெரிய இடைவெளி அவர்களை ஏலத்தில் பங்கு பெற விரும்பாமையை ஏற்படுத்துகின்றது. இது விநியோக பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது.
‘இயற்கை எரிவாயு விலையில் இந்த உயர்வு கடந்த ஆண்டு நிலக்கரி விலை உயர்வு போன்றது, நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியை பெற்றுக்கொள்ள முடியாது போனது.
அதனால் தேசிய மின் பற்றாக்குறைக்கு வழிவகுத்து நாட்டின் பல செயல்பாடுகளை முடக்கியது’ என்று சீன சமூக அறிவியல் கற்கைநிலையத்தின் கீழ் உள்ள தேசிய பொருளாதார மூலோபாயக் கற்கை நிலையத்தின் இணை ஆராய்ச்சியாளர் யோங்ஷெங் தெரிவித்தார்.
நிலக்கரி இறக்குமதியில் சீனாவின் சார்பு மிகக் குறைவாக உள்ளது, அதேசமயம் இயற்கை எரிவாயுவின் இறக்குமதி 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
இதனால் அரசு நிறுவனங்களுக்கு விநியோகத்தை உறுதி செய்வதற்கும் விலையை நிலைப்படுத்துவதற்கும் தீர்வு காண்பது கடினமாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.