நாடாளுமன்றத்தின் வரவு செலவுக் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது.
நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் வழமையான நேரத்தில் காலை 11 மணிக்கு ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மத்திய வரவுசெலவு தொடர்பான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ள அதேநேரம் ஜம்மு காஷ்மீரின் வரவுசெலவு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அவையில் தாக்கல் செய்யவுள்ளார்.
மேலும் வேலைவாய்ப்பின்மை விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை போன்றவற்றை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.