ராஜபக்ஷ மட்டுமல்ல முழு அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளதாக தாம் நம்புவதால், நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
பசில் ராஜபக்சவை தனிமைப்படுத்தி அரசாங்கத்தின் சொந்த பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் விரும்பவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று தெரிவித்திருந்தனர்.
பொருளாதார வீழ்ச்சிக்கு நிதி அமைச்சரின் நடத்தையே காரணம் என்றும் அவரை மட்டுமன்றி முழு அரசாங்கத்தையும் நாட்டுக்கு அனுப்புவதே தமது நோக்கம் என்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்
மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சனைகள் இருந்தபோதிலும் வரவுசெலவு திட்டம் மீதான விவாதத்தின் போதும் 2021 டிசம்பர் 10 ஆம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் பேசவில்லை என அவருக்கு எதிராக கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
இதேவேளை இன்று கொழும்பில் நடத்தவுள்ள போராட்டத்திற்கு வருபவர்களை தடுத்து நிறுத்துவதற்கு சில ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.