#GoHomeGota2022 மற்றும் #GoHomeGota என்ற ஹாஷ்டாக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இலங்கையில் டுவிட்டரில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்ததுள்ளது.
இதனை அடுத்து #WeAreWithGota என்ற எதிர் டுவிட்டர் ஹாஷ்டாக்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்தும் சிலர் பகிர்ந்துவருகின்றனர்.
நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பல அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின் முக்கிய ஆதரவாளர்கள் இதனை பயன்படுத்தி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும் #GoHomeGota2022 மற்றும் #GoHomeGota என்ற ஹாஷ்டாக்கள் தொடர்ந்தும் இலங்கையில் ட்ரெண்டிங்கில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.