ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளது.
ஹிஜாப் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறித்த மனுக்கள் மீதான விசாரணை தொடர்ச்சியாக 11 நாட்கள் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் தீர்ப்பு வெளியாகவுள்ளது.
அதேநேரம் பெங்களூரில் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும், போராட்டம் நடத்தவும், கொண்டாட்டத்தில் ஈடுபடவும் காவல் துறை தடை விதித்துள்ளது.
உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.