தமிழக சட்டப்பேரவை இன்று (வெள்ளிக்கிழமை) கூடவுள்ளது. இதன்போது எதிர்வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தொடரின்போது பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, அரசு திட்டங்களில் உள்ள குறைப்பாடுகள், அண்மையில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆகிய விடயங்கள் குறித்து பேரவையில் விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.