கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பெற்ற வெற்றியைத் தொடர்வதற்கு, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணி செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், நிபுணத்துவ வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
பொருள் கொள்வனவு, ஆர்ப்பாட்டங்கள் அல்லது பொதுக் கூட்டங்களின் போது சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகைக் காலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மக்கள் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் கொரோனா மரணம் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.