இந்திய கடன் முறையின் கீழ், அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இந்த வருடத்திற்கான இறக்குமதியாளர்கள் பதிவு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கைக்குக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்டுள்ள இணக்கப்பாட்டிற்கு அமைய, அத்தியாவசிய உணவுப் பொருள், மருந்துகள், சீமெந்து, துணி வகைகள், விலங்குணவுகள், விசேட உர வகைகள், தொழிற்சாலைக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை இறக்குமதியாளர்கள் இதன்போது பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய விரும்பும் இறக்குமதியாளர்கள் www.trade.gov.lk என்ற இணையதளத்திற்கு சென்று எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் எனவும் வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.