தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது அரசாங்கத்தின் விவேகமான முடிவு என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை காலதாமதமாக வந்தாலும், அதன் உதவியைப் பெறுவதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவு குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன கூறினார்.
காலியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், குறித்த தீர்மானத்தை எட்டுவதற்கு அரசாங்கம் ஒரு வருட காலத்தினை தாமதப்படுத்தியுள்ளது என சாடினார்.
இதன் காரணமாகவே தற்போதைய நிலைமை மேலும் மோசமாகியுள்ளது என வஜிர அபேவர்தன குற்றம் சாட்டினார்.