உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய துருப்புக்கள், அங்கு வீரமாக போரிடுவதாக ஜனாதிபதி விளாடிமீர் புடின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
க்ரைமியாவை ரஷ்யா கைப்பற்றியதன் எட்டாவது ஆண்டு நிறைவை குறிக்கும் பிரமாண்ட கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) பொதுக் கூட்டம் நடைபெற்ற லுஷ்னிகி மைதானம் மற்றும் அதைச் சுற்றிலும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருந்ததாக அறியமுடிகின்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய புடின், உக்ரைன் போரில் பங்கேற்றுள்ள ரஷ்ய ராணுவ வீரர்களை பாராட்டினார். உக்ரைனில் தொடர்ந்து வீரமாகப் போரிட்டதாக தனது படைகளைப் புடின் பாராட்டினார்.
மேலும், உக்ரைனில் உள்ள தனது எதிரிகள் நவ நாஜிக்கள் என்று குற்றம் சாட்டிய புடின், இனப்படுகொலையை தடுக்க உக்ரைன் மீது போர் நடவடிக்கை அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதுதவிர, ரஷ்ய தேசபக்தி பாடல்கள் இடம் பெற்ற கலை நிகழ்ச்சியும் பொதுக் கூட்ட மேடையில் நடைபெற்றது.