ஒவ்வொரு ஆளும் தரப்பின் அரசியல் வங்குரோத்து நிலையை மூடிமறைக்கும் கருவியாக சமுர்த்தி அபிவிருத்தி வேலைத்திட்டம் பயன்படுத்தப்பட்டதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும குற்றம் சுமத்தியுள்ளார்.
வெலிகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், குறித்த திட்டமானது நாட்டின் வரலாற்றில் மிகவும் பாரியளவில் அரசியல்மயப்படுத்தப்பட்ட அரச வேலைத் திட்டங்களில் ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி வேலைத்திட்டம் அதன் உத்தேசிக்கப்பட்ட இலக்குகளை அடையத் தவறியுள்ள அதேவேளை கொரோனா தொற்றுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு வழங்கிய சேவையையும் அவார் நினைவுகூர்ந்தார்.
ஒட்டுமொத்த பொதுமக்களையும் பாதிக்கும் வகையில் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடிகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சமுர்த்தி பயனர்களே என்றும் ஆகவே குறித்த வேலைத்திட்டத்தின் நோக்கங்களைப் பாதுகாக்கும் வகையில் அனைவரும் செயற்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.