சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் மூடப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
சுத்திகரித்தல் செயற்பாட்டுக்கான கச்சா எண்ணெய் இல்லாததால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் மற்றும் டொலர் நெருக்கடி காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த சில மாதங்களாக பல தடவைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.