மார்ச் 30 ஆம் திகதி இலங்கையில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே அவருக்கு பதிலாக வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் செயலர் ஹர்ஷ வர்தன் ஷரிங்லா தலைமையிலான உயர்மட்ட குழு இலங்கை வரவுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இந்தியா உட்பட பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு உத்தியோகப்பூர்வ அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இருப்பினும் பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் இறுதி நேரத்தில் உறுதி செய்யப்பட்டால், பலாலி விமான நிலையதின் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பித்தல் மற்றும் யாழ். கலாசார மையத்தின் திறப்பு விழா என்பன இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அமையப்பெற வேண்டும் என்பதே இந்தியாவின் ஆர்வமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.