உழவர் பெருமக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சாகுபடிப் பரப்பினை உயர்த்துவது, வேளாண்மைச் சார்ந்த அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைப்பது என்ற நல்ல திட்டங்கள் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
குறித்த நிதிநிலை அறிக்கை உழவர்களின் வருமானத்தை உயர்த்துவது, இயற்கை இடர்பாடுகளில் இருந்து உழவர்களைக் காப்பது என பல்வேறு நோக்கம் கொண்டதாக அமைத்துள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிறுதானிய சாகுபடி மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.