எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தீர்மானத்தை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், புதன்கிழமை நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியும் உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும் மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பில் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமது தரப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அழைப்பு கிடைத்தவுடன் மாநாட்டில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, இந்த மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.