இழந்த பகுதிகளை ரஷ்ய படைகளிடமிருந்து மீட்க, உக்ரைன் இராணுவம் தீவிர சண்டையிட்டுவருவதாக, அமெரிக்கா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
உக்ரைனின் பல்வேறு நகரங்களில் குண்டுவீச்சு தாக்குதல்களை தொடர்ந்துவரும் போதிலும், ரஷ்யப்படைகள் அந்நாட்டில் முன்னேறுவதில் தோல்வியடைந்துள்ளதாக, ஜேர்மனி ஆட்சித்துறை தலைவர் ஓலாஃப் ஷோட்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இருநாடுகளுக்கு இடையிலான போர் உக்ரைனை மட்டும் அழிப்பதில்லை எனவும், ரஷ்யாவின் எதிர்காலத்தையும் அழிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு மேலும் பல தடைகள் குறித்து எச்சரிக்கை விடுத்த அவர், ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை தொடர்ந்து தீவிரமாக்கி வரும் அதேவேளை, அந்த தடைகள் ரஷ்ய தலைமையைவிட ஐரோப்பிய நாடுகளை பாதிக்கக்கூடாது என குறிப்பிட்டார்.
மேலும், உக்ரைனியர்கள் ஜேர்மனியை நம்பலாம் எனவும், அந்நாட்டிலிருந்து அகதிகளை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
இதே கருத்தைக் கூறியுள்ள அமெரிக்காவும், இழந்த பகுதிகளை ரஷ்ய படையிடமிருந்து மீட்க உக்ரைன் படைகள் தீவிர சண்டையிட்டுவருவதாக தெரிவித்துள்ளது.