தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யுனிட்கள் உள்ளன.
இதன் மூலம் 1050 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்று காலத்தில் காற்றாலை மூலம் போதுமான மின்சாரம் கிடைப்பதால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்படுவதும், பின்னர் துவக்கப்படுவதும் வழக்கம்.
இந்நிலையில் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் முதல் 4 யுனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 5வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது.