வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணியினை சுவீகரிக்கிறார்களா? அவர்களுக்கு எதற்கு காணி என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்ததுடன், பகல் 1 மணி வரை நடைபெற்றிருந்தது.
இதன்போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்ததாக கூறப்படுகின்றது.
வயல் நிலங்களை சுவீகரிப்பது, மக்கள் நுழைய தடைவிதிப்பதெல்லாம் ஏற்க முடியாத நடைமுறைகள் என ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.