எதிர்காலத்தில் மழை கிடைக்காவிடின், மின்சார நெருக்கடி தீவிரமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
நீர் மின்னுற்பத்தி நிலையங்களிலுள்ள நீர் இன்னும் 10 நாட்களுக்கு மாத்திரமே போதுமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தில் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் கிடைக்காவிடின், மின்னுற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நாட்களில் நீர் மின்சாரத்தில் இருந்து 90 இலட்சம் மில்லியன் மின் அலகுகள் பெறப்படுகின்றன.
இந்நிலையில், எதிர்காலத்தில் மின்சார நெருக்கடி உக்கிரமடையும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.