ருமேனியாவில் இருந்து பாரவூர்தி ஒன்றில் ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்பி செல்ல முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 15 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ருமேனியாவின் நட்லாக் 2 எல்லை பகுதியில் பாரவூர்தி ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது அதில் மறைந்திருந்த 16 இலங்கையர்கள் உள்ளடங்களாக 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில், குறித்த எல்லையை கடக்க முற்பட்ட, இத்தாலியில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்றில் ருமேனியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமிருந்தும் ஏற்கனவே பாரவூர்தியில் வைத்து கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களுடைய ஆவணங்கள், மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் 22 முதல் 51 வயதுக்கு இடைபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் இலங்கையில் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற விபரங்கள் வெளியாகவில்லை.