இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைமைப்பதவிக்கு போட்டி எதுவும் நிலவாது எனவும், செந்தில் தொண்டமான் ஏகமனதாக தெரிவுசெய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று(புதன்கிழமை) கூடுகின்றது. இதன்போது புதிய தலைவர் தெரிவுசெய்யப்படவுள்ளார்.
தலைமைப்பதவிக்கு ஆரம்பத்தில் இருமுனை போட்டி நிலவிவந்தாலும் செந்தில் தொண்டமானுக்கான ஆதரவு வலுத்ததால், அப்பதவிக்கு போட்டியிடுவதில்லை என மற்றைய தரப்பு தீர்மானித்துள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி மற்றும் மலையக மக்கள் எதிர்கொண்டுள்ள கடும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் மக்களின் எதிர்கால நலனை அடிப்படையாக கொண்டு தலைமைத்துவ பதவிக்கான வெற்றிடம் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.