வடமேற்கு ஆபிரிக்க நாடான துனிசியாவில் நாடாளுமன்றத்தைக் கலைக்க, ஜனாதிபதி காய்ஸ் சயீது உத்தரவிட்டுள்ளார்.
அவருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தை அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை செல்லாததாக அறிவிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்ததைத் தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
துனீசியாவில் பொதுமக்களின் கடுமையான போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டில் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்ட ஜனநாயக அரசாங்கம் அமைக்கப்பட்டது.
எனினும், பொருளாதார நெருக்கடியையும் போராட்டங்களையும் காரணம் காட்டி, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி காய்ஸ் சயீது முடக்கினார். மேலும், அவருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கக் கூடிய பல்வேறு உத்தரவுகளையம் சயீது பிறப்பித்தார்.
துனீசியாவில் பொதுமக்களின் கடுமையான போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டில் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்ட ஜனநாயக அரசாங்கம் அமைக்கப்பட்டது.
எனினும், பொருளாதார நெருக்கடியையும் போராட்டங்களையும் காரணம் காட்டி, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி காய்ஸ் சயீது முடக்கினார். மேலும், அவருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கக் கூடிய பல்வேறு உத்தரவுகளையும் சயீது பிறப்பித்தார்.
இந்தச் சூழலில், ஜனாதிபதியின் இந்த உத்தரவுகளை செல்லாததாக்க எதிரக்கட்சிகள் நடத்திய காணொளி மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, நாடாளுமன்றத்தை ஒரேடியாகக் கலைத்து காய்ஸ் சயீது உத்தரவிட்டுள்ளார்.