ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
மும்பையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரொபின் உத்தப்பா 50 ஓட்டங்களையும் சிவம் டுபே 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியின் பந்துவீச்சில், அவிஷ்கான், ஹென்ரிவ் டை மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 211 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குயிண்டன் டி கொக் 61 ஓட்டங்களையும் எவீன் லுயிஸ் ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், டுவைன் பிரிடோரியஸ் 2 விக்கெட்டுகளையும் டுஸார் தேஷ்பாண்டே மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 23 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட எவீன் லுயிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.