இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மார்ச் மாதத்துடன், 417.8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இது குறித்து பேசிய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய பொருளாதாரம் பல சாதனைகளை முறியடிக்கும் வகையில் வளரும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.
அதேநேரம் இந்தியாவின் ஏற்றுமதி வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமானது எனவும், அவர் கூறியுள்ளார்.
இதேவேளை தற்போது எட்டப்பட்டுள்ள இந்தச் சாதனை முந்தைய ஆண்டை விட 14.53 விழுக்காடு அதிகமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.