சுவீடனில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு நான்காவது தவணை கொவிட் தடுப்பூசியை செலுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுவீடன் பொது சுகாதார நிறுவனம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
’65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்போர், வீட்டுப் பராமரிப்பு பெற்று வருவோருக்கு நான்காவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும்.
மேலும் 18 முதல் 64 வயது வரையுள்ள தீவிர நோய் எதிர்ப்புக் குறைபாடு உடையவர்களுக்கும் நான்காவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும்.
தீவிர உடல்நலக் குறைபாடு மற்றும் இறப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதே இதன் நோக்கம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்கத்தையே இதுவரை அறிவிக்காத சுவீடன், கொவிட் தொற்றுப் பரவலை தடுக்க கட்டுப்படுத்த தனிநபர் பொறுப்புடைமைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.