போதைப்பொருள் அருந்தி தண்டனை பெற்றவர்கள், புதிய திட்டங்களின் கீழ் மீண்டும் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவதற்கு முன், மறுவாழ்வு வகுப்புகளுக்கு சமூகமளிக்க வேண்டும்.
கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் பிரித்தானியா முழுவதும் போதைப்பொருள் அருந்தி வாகனம் செலுத்தியதாக 12,000க்கும் மேற்பட்ட பதிவுகள் இருப்பதாக போக்குவரத்துத் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், அவர்கள் மீண்டும் மீண்டும் குற்றம் செய்வது குறித்த கவலைக்கு மத்தியில் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் இந்த திட்டத்தை முன்வைத்தார்.
தண்டனை பெற்றவர்களில் 44 சதவீத பேர் மீண்டும் மீண்டும் குற்றவாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
போதையில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் வாகனம் ஓட்ட தடை, சிறைத்தண்டனை அல்லது நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்படுகிறது.
இருப்பினும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக தண்டனை பெற்றவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு படிப்புகளை அவர்கள் தற்போது முடிக்க வேண்டிய அவசியமில்லை.