இந்தியா- சீனா எல்லைக்கான நிதி முந்தைய நிதியாண்டை விட 6 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநிலங்கள் அவையில் பேசிய மத்திய அமைச்சர் நித்யானந்த ராய் , வடகிழக்கு மாநிலங்களின் எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறிப்பிட்டக் காலக்கெடுவுக்குள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எல்லை உள்கட்டமைப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்தோ-சீனா எல்லைப் பகுதிகளுக்கான நிதி 42 கோடி ரூபாயில் இருந்து தற்போது 249 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.