ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதிகளை அதிகரிக்கக்கூடாது என அமெரிக்கா, இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ஒவ்வொரு நட்பு நாடும், அமெரிக்கா, ரஷ்யாவுக்கு விதித்த பொருளாதாரத் தடைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் சொந்த முடிவையே எடுத்து வருவதாக தெரிவித்த அவர், ”இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கும் எண்ணெய் மொத்தத்தில் ஒன்று அல்லது 2 சதவீதம் என்று குறைந்த அளவில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் போன்றவற்றை அமெரிக்காவின் தடையை மீறி இந்தியா வாங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.