மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் ரஷ்யாவிற்கு எதிராக மேலும் ஒரு பொருளாதார தடைகளை புதன்கிழமை அறிவிக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் ரஷ்ய நிதி மற்றும் அரசுக்கு சொந்தமான அமைப்புகளையும், சில அதிகாரிகள் உள்ளிட்டவர்களை குறிவைக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இவ்வாறு விதிக்கப்படும் பொருளாதார தடையினால் ரஷ்யாவின் அரச அதிகாரத்தின் முக்கிய கருவிகளை சீர்குலையும் என்றும் கடுமையான மற்றும் உடனடி பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இரண்டு மகள்களையும் குறிவைத்து பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற G7 நாடுகளுடன் ஒன்றிணைந்து பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்படும் என வெள்ளை மாளிகை ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.