அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று (புதன்கிழமை) முதல் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இதனை அடுத்து புதிய தவணைக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னதாக எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி முதல் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.