குற்றவியல் நடைமுறை சட்டத்திருத்தமூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலம் குற்றவாளியின் கைரேகை உயரம், கால் தடம், கருவிழி வட்டம் போன்ற விவரங்களை தேசிய குற்ற ஆவணத்தில் சேகரித்து வைக்க உதவுகிறது.
இந்த சட்டமூலம் தவறாக பயன்படுத்தப்படலாம் என எதிர்கட்சியினர் விமர்சித்த நிலையில், அதற்கு பதிலளித்த அமித்ஷா, எந்த ஒரு தனிநபரின் உரிமையிலும் சமரசம் செய்யப்படாது என உறுதியளித்தார்.
குற்றவாளிகளை அதிகளவில் சட்டத்தின் முன் நிறுத்த இந்த சட்டத்திருத்தம் உதவும் எனவும் கூறினார். அதேநேரம் குற்றவாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், இந்த சட்டம் உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.