இலங்கைக்கு 76,000 மெட்ரிக் தொன் எரிபொருட்கள் இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 36,000 மெட்ரிக் தொன்பெற்றோல் மற்றும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் நேற்றும்,நேற்று முன்தினமும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்திய கடன் வசதியின் கீழ் இதுவரையில், 270,000 மெட்ரிக் தொன் எரிபொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.