பிரதி சபாநாயகர் பதவியில் தான் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர், அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கும், அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்வதற்கும் தீர்மானித்தனர்.
இதனை அடுத்து பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
நாடாளுமன்றில் ஜனநாயகம் பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என தெரிவித்து அவரது இராஜினாமாவை ஜனாதிபதி நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.