ஜனாதிபதி பதவி விலகி ராஜபக்ஷ குடும்பமு ம் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும கேட்டுக்கொண்டார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், “இந்த நாடு நன்றாகவே இருந்தது. மக்கள் கடந்த காலங்களில் வரிசையில் இருக்கவில்லை.
இந்நிலையில் மக்களின் பேச்சை அரசாங்கம் செவிமடுக்காத காரணத்தினாலேயே இந்த விளைவு ஏற்பட்டது. உரப்பிரச்சினை, ஆசிரியர்களின் பிரச்சினை என்பவற்றில் மக்களின் குரலை அரசாங்கம் கேட்கவில்லை.
தற்போது மக்கள், ஜனாதிபதியை வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகிறார்கள். இதனையேனும் அரசாங்கம் செவிமடுக்க வேண்டும். அரசாங்கம் அவ்வாறு கேட்டால், இந்த நாட்டை கட்டியெழுப்ப ஒத்துழைப்பினை வழங்க நாம் தயாராகவே இருக்கிறோம்.
ஆனால், ஜனாதிபதி பதவி விலகியே ஆகவேண்டும். ராஜபக்ஷ குடும்பமே ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும். அப்படியானால் அவர்களால் கொள்கையடிக்கப்பட்ட பணத்தை மீட்டு, நாம் ஆட்சி நடத்த தயாராகவே இருக்கிறோம்” என தெரிவித்தார்.