20 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தனிநபர் பிரேரணையை முன்வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுத்துச் செல்வதற்கும் ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று அங்கீகாரம் பெறுவதற்கும் எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.
சஜித் பிரேமதாச விரைவில் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெறுவார் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.
இதேவேளை நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ஜனாதிபதியின் அதிகாரங்களை நீக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.