நாடுமுழுவதும் இன்று (புதன்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு மின்தடை அமுலாகாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த 3 நாட்களிலும் மின்தடையை அமுல்படுத்தாதிருப்பதற்கான ஒத்துழைப்பு, மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றிடம் இருந்து கிடைத்துள்ளன.
இதேநேரம், 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில், சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்தடை அமுலாகும்.
காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் மின்தாடை அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.