இந்தியா – அவுஸ்ரேலியா உறவின் அண்மைக்கால முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகளை தொடர்பில் இந்தயாவுக்கான அவுஸ்ரேலிய தூதுவர் பாரெல் கருத்து வெளியிட்டுள்ளதோடு பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர வர்த்தகம் மற்றும் அதிக முதலீடு ஆகியவற்றை எளிதாக்கும் திறந்த சந்தைகளைப் பாராட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
புதுடில்லியில், அவுஸ்ரேலிய, இந்தியர் கல்வி நிறுவனத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், திறந்த சந்தைகள் தடையற்ற வர்த்தகம், அதிக முதலீடு மற்றும் வலுவான மக்களுக்கு இடையேயான உறவுகளை எளிதாக்கும் ஒரு ஒழுங்கை உருவாக்குவது புனிதமான கடமை என இந்தியப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
எமது நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிஸன், ஒரேஎண்ணம் கொண்டவர்களிடையே இருதரப்பு உறவுகளை ஏற்படுத்துவதன் ஊடாகவே இலக்குகளை அடைய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
2020இல் தொற்றுநோய் ஆரம்பித்ததன் பின்னர் அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் இந்த சொற்பொழிவில் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், அமைதியான மற்றும் மீள்தன்மை கொண்ட இந்தோ-பசிபிக் பகுதியை உறுதி செய்வதற்கான பகிரப்பட்ட பொறுப்பை அவுஸ்ரேலியாவும் இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளன’ என அவர் குறிப்பிட்டார்.
‘ஐரோப்பாவின் தற்போதைய நிகழ்வுகள் உலகம் எதிர்கொள்ளும் ஆழமான மூலோபாய சவால்கள் மற்றும் இடையூறுகளை எமக்கு நினைவூட்டுகின்றன.
இந்நிலையில் இந்தியாவும், அவுஸ்ரேலியாவும் பல தசாப்தங்களாக அமைதி மற்றும் செழிப்புக்கு ஆதரவளித்தது செயற்படுகின்றது. இரு நாடுகளின் புவியியல் உலகின் மூலோபாய ஈர்ப்பு மையத்தில் உள்ளது.
மேலும் சர்வதேச அமைப்பு பல துருவங்களாக மாறும்போது, பிராந்தியத்தின் பின்னடைவுகள் குறித்த பரிசோதனைகளும் மேலெழுகின்றன என்றும் அவர் கூறினார்.
2020 ஜூனில், பிரதமர் மோடியின் பங்கேற்புடன் மெய்நிகர் வழியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில், விரிவானதொரு மூலோபாய கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது, இந்தோ-பசிபிக் பகுதியில் இரு நாடுகளும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு பகுதிகளில் மூலோபாய மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உயர் பிணைப்பைக் கொண்டுள்ளது.
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் நடைமுறை ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தங்களில், பாதுகாப்பு கடல்சார், இணைய தொழில்நுட்பம், கனிமங்கள், கல்வி, நீர், பொதுநிர்வாகம் என்பன உள்ளடங்குகின்றன.
இரு நாடுகளுக்கு இடையே வலுவான தனியார் துறை இணைப்புகளை உருவாக்குவதற்கு உதவுவதற்காக வர்த்தக பரிமாற்றத்தை வழங்கியுள்ளோம்.
மேலும், ஏனைய துறைகளில் குறிப்பாக, விவசாயத்தில், நீடித்த அரசு மற்றும் தொழில்துறை ஈடுபாட்டைத் தூண்டுவதற்காக, பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள், தளவாடங்கள் ஆகியவற்றில் கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய, அவுஸ்திரேலியா சமூகத்தின் மிக அழுத்தமான சில சவால்களைச் சமாளிப்பதற்கான பொருளாதார உறவுகளை ஏற்படுத்தியுள்ளோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.