இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இந்தியா உணவு மற்றும் எரிபொருளை வழங்கி வருவதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் டொக்டர் ராஜ்குமார் ரஞ்சன் தெரிவித்தார்.
‘இந்தியக் கொள்கைகளில் எப்போதுமே மற்றவர்களுக்கு உதவ வேண்டும். என்பது தெளிவாக உள்ளது. இலங்கையின் நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன. அதற்கு பல காரணங்கள் காணப்படலாம்.
ஆனால் மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகளை சமாளிக்க உணவு மற்றும் எரிபொருளை நாங்கள் வழங்குகிறோம்’ என்றும் அவர் கூறினார்.
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இலங்கை மக்கள் தொடர்ச்சியாக நடத்தி வரும் போராட்டம் காரணமாக, அரசாங்க அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.
தனது அமைச்சரவை அமைச்சர்கள் பெருமளவில் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார நெருக்கடிகளை மீட்கும் இடைக்கால அரசாங்கத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை இணையுமாறு கேட்டுக்கொண்டபோதும், அத்தரப்பினர் முன்வரவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயல்பாடுகளின் சட்டபூர்வமான தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக நான்கு பேர் கொண்ட அமைச்சரவையை அமைத்துள்ளார்.
போராட்டங்கள் தீவிரமடைந்தமையால், சமூக ஊடக தளங்களுக்கான அணுகலைத் அரசாங்கம் தடுத்தது.
ஆனால் பிரதமர் மஹிந்தவின் புதல்வாரன நாமல் ராஜபக்ஷ அதற்கு எதிராகப் பேசியதை அடுத்து அத்தடை நீக்கப்பட்டது. எனினும் தற்போதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.