காஷ்மீர் பள்ளத்தாக்கில் எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அப்பால் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
குறித்த முகாம்களில் 60-80 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் எல்லைக்கு அப்பால் பயங்கரவாத முகாம்கள் மீண்டும் செயல்படத் ஆரம்பித்துள்ளதாகவும், அங்கு 60 முதல் 80 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும், காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பயிற்சி பெறுபவர்கள் ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் பங்கேற்று திரும்பியவர்களாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளதுடன், பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த கூலிப்படையினர் எனவும் அவர் கூறியுள்ளார்.