குற்றவியல் அடையாள நடைமுறை சட்டதிருத்த மூலத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த சட்டமூலத்தின்படி, பெண்கள், அல்லது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கைது செய்யப்படுவோர், குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கக் கூடியக் குற்றங்களில் கைது செய்யப்படுவோரிடம் இருந்து கட்டாயம் உயிரி அடையாளங்களைச் சேகரிக்க முடியும்.
அதேநேரம் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவோரின் அடையளாங்களையும் சேகரிக்க சட்டமூலத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
இந்த அடையாளங்கள் தொடா்பான விவரங்கள் மின்னணு அல்லது எண்ம (டிஜிட்டல்) வடிவில் 75 ஆண்டுகள் பாதுகாக்கப்படும். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்த விவரங்களைப் பராமரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.