வெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற முடிவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யுமாறு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயம் குறித்து அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார்.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், உலகின் பல்வேறு பகுதிகளில் புதிய பிறழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொற்றுநோய்களின் மற்றொரு அலையை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
எனவே நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நமது பாதுகாப்பைக் கைவிடுவது விவேகமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக நாடு முழுவதும் மக்கள் தினசரி ஒன்றுகூடுகின்றனர் என்பதுடன், மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.