ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவது தேச நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என மத்திய தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ” நமது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதாலோ அல்லது பலவீனப்படுவதன் மூலமோ தேச நலனுக்கு தீங்குதான் ஏற்படும்.
ரூபாயின் வீழ்ச்சியானது ஏற்றுமதி செலவை அதிகரிக்கிறது. நாட்டில் பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது. இறக்குமதியைச் சார்ந்துள்ள இந்திய பொருட்களுக்கு சந்தையில் போதிய விலை கிடைக்காத நிலையை ஏற்படுத்துகிறது.
எனவே ரூபாய் மதிப்பை நிலையாக வைத்திருக்கவும் ஏற்றுமதி உதவுகிறது. வளமான ஏற்றுமதி முதலீடு ஆகியன அந்நியச் செலாவணி இருப்பை அதிகரிக்க வழிகோலுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.