அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கத் தவறினால் மனசாட்சிப்படி தீர்மானம் எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்த அவர்கள், ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மகஜரில் புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, வசந்த யாப்பா பண்டார, உதேனி கிரிந்திகொட, குமாரசிறி ரத்நாயக்க, கே.பி.எஸ்.குமாரசிறி, ராஜித விக்கிரமசிங்க, அகில எல்லாவல, லலித் எல்லாவல, அஜித் ராஜபக்ஷ, உபுல் கல்லாபதி மற்றும் சுதத் மஞ்சுள உள்ளிட்டவர்களே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.