இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த ஆண்டை விட 2.6 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெற்றோலிய துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” பொதுத்துறையைச் சேர்ந்த ஓஎன்ஜிசி நிறுவனம் நிர்ணயித்த இலக்கை விட குறைவாகவே கச்சா எண்ணெயை உற்பத்தி செய்துள்ளது.
கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2.63 வீதம் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கச்சா எண்ணெய் உற்பத்தி இலக்கோடு ஒப்பிடுகையில் 11.63 சதவீதம் குறைவாகும்.
அதேநேரம் ரிலையன்ஸ் – பிரிட்டிஷ் பெற்றோலியத்துடன் இணைந்து கிருஷ்ணா-கோதாவரி படுக்கையில் உற்பத்தியை மேம்படுத்தியது, இயற்கை எரிவாயு உற்பத்தி அதிகரிப்புக்கு பெரிதும் உதவியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.