இந்தியாவில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் ஐ.பி.எல்.ரி-20 தொடரில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்காக, இலங்கை அணியின் இளம் வீரரான மகேஷ் பத்திரன ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நடப்பு சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஆடம் மில்னுக்கு பதிலாக மகேஷ் பத்திரன அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
மகேஷ் பத்திரன முன்னதாக 2020ஆம் மற்றும் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரில் விளையாடியிருந்தார். ஆனால் அவர் தேசிய அணியில் இதுவரை அறிமுகமாகவில்லை.
19 வயதான வலக் கை மித வேகப்பந்து வீச்சாளரான மகேஷ் பத்திரன, அபுதாபியில் நடைபெறும் ரி-10 தொடரில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.