பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 18ஆம் திகதி முதல் நீக்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த நிலையில், குறித்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல என பல்வேறு தரப்பினரும் தெரிவித்திருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.