எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அம்பலாங்கொட, பண்டாரவளை, பெலியத்த, ஹாலிஎல, மாத்தறை, மஹியங்கனை, மொனராகலை, நொச்சியாகம மற்றும் காலி ஆகிய இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பலாங்கொடை – எல்பிட்டிய வீதியின் வத்துகெதர பிரதேசத்தில் டிப்பர் பாரவூர்தி சாரதிகள் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளை – பசறை 3ஆம் தூண் பகுதியில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.