எல்லைப் பகுதியில் படைகளை குறைப்பதுதான் சீனாவுடனான முறண்பாட்டை குறைப்பதற்கான வழி என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா – சீனாவுக்கு இடையில் எல்லைப் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி இதுவரை பலசுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் தீர்வு எட்டப்படவில்லை. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ராஜ்நாத்சிங் மேற்படி கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ”லடாக் எல்லைப் பகுதியில் சுமார் 50 முதல் 60 ஆயிரம் வீரர்கள் வரை இந்தியாவும் சீனாவும் படைகளைக் குவித்து வைத்துள்ளன.
எல்லைக்கோடு பகுதியின் சில குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட போதும் இருதரப்பிலும் படைகள் முழுமையாகப் பின்வாங்கவில்லை.
இந்தியப் படைகள் களத்தில் உறுதியுடன் நின்ற போதும் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் தொடரும்” தெரிவித்துள்ளார்.