ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், “கட்சியின் நாக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இது சம்பந்தமாக அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டது. அவர்கள் அனுப்பியிருந்த விளக்கம் பற்றி ஆராயப்பட்டது.
மூவர் அனுப்பிய விளக்கம் தொடர்பில் ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் விசாரணை இடம்பெறும்.
அதுவரை கட்சி உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்படுவர்.
நஸீர் அஹமட் வழங்கியிருந்த விளக்கம் திருப்திகரமாக அமையவில்லை. உண்மைக்கு புறம்பான விடயங்களை அதில் குறிப்பிட்டுள்ளர்.
எனவே அவரை உடனடியாக கட்சியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.